உனது வானத்தின் நிலவு
எங்கோ விழுந்து விட்டது
உன் இதயத்தின் சூரியோதயம்
தொலைந்து போய்விட்டது

விசும்பல்களிலும் புலம்பல்களிலும்
புலர்ந்துவிடுவதில்லை - நீ
தொலைத்த வாழ்க்கை அதையும்
கடந்து எதுவோ இருக்கிறது

திரும்பிபார் உனக்கான பாதை
இன்னும் அடைக்க் படவில்லை
முயற்சித்தால் திரும்பிவிடலாம்
பாதையும் வெகு தூரமில்லை

உன் கடமைகளில் காதல்மட்டுமல்ல
விரைந்து முடித்துக்கொள்ள- அதையும்
கடந்து எதுவோ இருக்கிறது உன்
விழிகளை அகல விரித்து பார்

குருகி நிற்பதிலும் குருந்தாடி
வளர்ப்பதிலும் குமுறி அழுவதிலும்
நிறைந்துவிடுவதல்ல உன் காதல்

தோல்வியை தூக்கி தூர
வைத்துவிட்டு தொலை நோக்கு
பார்வையில் உலகைப்பார் நீ
காதலிக்க ஏராளம் ஏராளம்.

ராஜ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.