More articles by கோவி.லெனின்
- கோட்சேக்கள் தேசத்தில் திப்பு தேசத் துரோகிதான்! (15 டிச 2015)
- ஜனநாயகக் கல்லறையில் பதவியேற்பு விழா! (30 ஜூன் 2015)
- ஹனீபாவின் இசையில்.... (29 ஏப் 2015)
- இன்றைய ஆட்சியில் சுதந்திரம்... ஜனநாயகம்... வெங்காயம்! (14 அக் 2014)
- காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு (04 ஜூலை 2014)
அரிசி குருணையைக்
கொத்திக் கொண்டிருந்த
சேவலுக்குத் தெரியாதுஇதுதான் தனது
கடைசி இரவென்று
அதிகாலையில்
அது கூவியபிறகுதான்
தூக்கம் கலைந்தோம்
விருந்து தயாரிப்பதற்காக
கத்திக் கீறலில்
ரத்தம் பீறிட்டபோது
முனகி அடங்கியது
அதன் உயிரின் குரல்
அறுத்துச் சிதைத்தபோது
பதைபதைத்த மனது
கொதித்த குழம்பு
வாசனையில்
அடங்கிவிட்டது.
- கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.