எனக்கும்உனக்குமான இடைவெளி
பிரிவின் சொற்களால்
நிரம்புகிறது
உதிர்ந்து விழும்
நட்சத்திரத்தின் பேரோசை
பிரிவின் காலடியில்
மௌனித்து வீழ்கிறது.
தாகித்தலையும்
நதியின் தடங்களில்
நான் வரைந்து கொண்டிருக்கிறேன்
நம் பிரிவின் சித்திரத்தை.
- த.அகிலன் (
எனக்கும்கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.