மென் கருப்பாய்
அடர் கருப்பாய்
கிளையிடுக்கில்
விறைத்து வளரும்

நுனியில் சிறுத்து
கூர்மையாய்

குத்தலாம்
சொருகலாம்
கிழிக்கலாம்
குருதி சிந்த
வைக்கலாம்

மறைந்து கிடக்கும்
எப்பொழுதும்

நெரிகட்டிக் கொள்ளும்
நெறிஞ்சிக் குத்தலில்

குத்திக் கொள்வதுதாம்
நூறு சதம்
குத்திவிட்டதென்பதும்
நூறு சதம்

சத்தியமாய் இது
முள் பற்றியக்
குறிப்புதான். 

மதியழகன் சுப்பையா, மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.