Madமிகச் சரியாக
என் பெயர் சொல்லி
அழைத்து
காசு கேட்கிறாள்

எல்லோருக்கும்
மாஸ்டராகிப்போன
டீக்கடைக்காரனின்
உண்மைப்
பெயர் விளித்து
தேநீர் வேண்டுகிறாள்

இட்லிகாரியென்றே
பழகிப்போனவளை
அவளே மறந்த
பெயரிட்டுக் கூவி
வயிறு தட்டுகிறாள்

தன்னைக் கடக்கும்
யாரொருவர்
பெயரையும்
தப்பில்லாது
ஒப்பிக்கிறாள்

வியப்போடு நெருங்கி
அவள் பெயர் கேட்க
‘பைத்தியம்’ என்கிறாள்
வலியேற்படுத்தி


மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.