headதலையைப்பார்த்துச் சிலர்
நிலையைச் சொல்லலாம்!

வழுக்கைத் தலை சிலர்
வயதைக் காட்டும்!

மொட்டைத் தலை ‘முருகன்'
பக்தியைக் காட்டும்!

‘வெள்ளைத்'தலை சிலர்
விரக்தியைக் காட்டும்!

கருப்புத்தலைகள் சிலர்
இளமையைக் காட்டும்!

வெள்ளையும் கருப்பும் சிலர்
செல்வத்தைக் காட்டும்!

ஓ... ... ... புரிகிறது
செல்வத்துள் எல்லாம் தலை! 

டாக்டர் மா.வீ. தியாகராசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.