ஒரு காற்றற்ற வெளியிலே
வானமற்ற நிலா வெப்பக்கதிர் வீச
சத்தங்கள் செத்து விட்ட வீதியில்
சொல்லும் வார்த்தை போய் சேர
எல்லை இல்லாமல்
சுற்றும் முற்றும் பார்த்து
தலை சாய்த்து
கண்மூடி
உரக்க சொல்ல வந்தாள்
தன் பழைய காதலை…
முடியாமல் முணுமுணுக்க முயலுகையில்
தட்டி விட்டுப் போகிறது
சமூகத்தின் பேரிரைச்சல்…..

ரவிகுமார். தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.