குண்டுகளைப் போல
Bomb
உலகமும் உருண்டை

உயிர்கள் மூச்சுவிடும்
இலவசக் காற்றால்...

பாறைகளில்
நீர் தேடும் வேர் முண்டுகள்

நகர்ந்து போகும்
மண்புழுக்கள் சில...
அவற்றிற்குத் தெரிந்தவை
கரிசல் மண்ணும்
கரிசன ஈரமும்

மிச்சம் இருக்கின்ற உயிருக்குத்
தேடல்தான் என்ன?

மரணப் படுக்கையில்
பொய்த்துவிடும் அறிவு
சிரிக்கக் கற்றுக் கொண்டன முகங்கள்

விழுகின்ற குண்டுகளில்
பூக்களும் நிறம் மாறி விட்டன

வெற்றியோ தோல்வியோ
காண்பதற்கு
உயிரோடு இருக்க வேண்டுமே!

வாழ்க்கையை இழந்துவிட்டாலும்
வரலாறு இருக்கும்

குண்டுகளைப் பூக்களாக்கும்
வித்தை கற்க வேண்டும் முதலில்!

அனுபமா உதிவ்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It