அழுது கொண்டிருக்கிறாள் ஒரு மாது
வெற்றுக் கால்களுடன் கரையினில் நின்று.
வெற்றுத் தோணியொன்று கட்டவிழ்ந்து
Lady cry
நீரில் தத்தளித்து மிதக்கிறது அலையடித்து -
செத்துப்போன பறவைமிதப்பதைப்போல.
நீரடித்துச் செல்லும் திசையினில் செல்கிறது
அது ஏரியின் குறுக்கே
மலைகளின் அடிவாரத்தில்
மோதிச் சிதைவதற்காய்.
மாலைப்பொழுது கவிகிறது
இஸ்னிக் ஏரியின் மீது.
கனத்த குரலுடைய குதிரை வீரர்கள்
சூரியனின் குரல்வளையை வகிர்ந்து
குருதியைக் கொட்டிச் சிந்துகின்றனர்
ஏரியின் நீர்ப்பரப்பில்.
அழுது கொண்டிருக்கிறாள் ஒரு மாது
வெற்றுக் கால்களுடன் கரையில் நின்று
பசியாற ஒரு நண்டு பிடித்ததற்காய்
கோட்டைச்சிறைக்குள் விலங்கிடப்பட்டு வாடும்
ஒரு மீனவனின் அன்புத் துணைவி அவள் !

மூலம்:The Epic of Sheik Bedreddin
by Nazim Hikmath

புதுவை ஞானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It