Love Failureஅழுதுகரைத்த உன் ஞாபகங்கங்களின்
ஒவ்வொரு துளியும் பெருகி
சகிக்காத ஒரு சிவப்பு ஆறாய்
என் எல்லா பாதைகளின் ஓரங்களிலும்
துரத்தி வந்தது
முதலில் மிரட்டியது
மிரண்டேன்
கட்டளையிட்டது
அடிபணிந்தேன்
பிறகு,
களிம்பு பூசிவிடும் நண்பனானேன்
கொஞ்சம் விழித்தேன்
அதன்பின்
கவனிப்பிற்காகவும் பிறகு அன்பிற்காகவும் கெஞ்சியது
உதாசினப்படுத்தினேன்
அழுதது.
இப்போது,
சிறு பையன்கள் மூத்திரம் போகும் சாக்கடையானது.

-TKB காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

-TKB காந்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.