உன்னிடம் சொல்லிவிடவென்று
உருவாக்கி வைத்த வார்த்தையொன்று
சொல்லப்படாமலேயே காத்திருக்கிறது
உனை கடக்கையில்,
வழக்கமான புன்னகையில்,
மணிக்கனக்கான உரையாடலில்,
ஒரு பொழுதினில்
என் கண்களோ, செய்கைகளோ
ஏதோ ஒன்று உணர்த்தியிருக்கக்கூடும்
நான் சொல்லிவிட துடிக்கும் வார்த்தைதனை
பாசாங்கில் பவனி வரும்
உன்னிடம் கூட எனக்கான வார்த்தை
தவமிருக்கக்கூடும்

- சில்வண்டு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
- சில்வண்டு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It