விளங்காத வரிகளுக்குள்
விதைக்கின்றாய் கவிதைகளை
விளையாட்டாய் ஓடிவிட்ட
காலங்களின் மெளனராகம்

புதைத்து வைத்த உண்மைகள்
புலருகின்ற பொழுதென்று ?
புரியாத புதிர்களுக்கு விடை,

பகருகின்ற வேளை எப்போ ?
உனக்குள்ளே கேள்விகள் தோழா ...
உனைத்தானே அரிக்கின்றன
உண்மைகளின் பாரம் ஏனோ
உள்ளத்தை அமுக்கின்றன

ஈரமில்லா இதயங்களின்
காரமிகு செயல்களெல்லாம்
சாரமிகு அனுபவங்களை எமக்கு
சாராமாரியாக அள்ளித் தருகின்றன

யாருமறியாச் செய்கைகளென அவர்கள்
ரகசியமாய்ச் செய்யும் செயல்கள்
தானறியும் எதுவும் தெரியாதோ
தத்தமது மனசாட்சி அதுதான் அரசாட்சி

அகலத்தையே புலர வைக்கும்
ஆதவனின் ஒளியதனை மறைக்கும்
கருமேகம் நிலைப்பதெல்லாம்
கணநேரம் மறவாதே!

- சக்தி சக்திதாசன். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It