ஆற்றங்கரையின் விளிம்பில்
வீற்றிருக்கும்
தென்னை மரத்திலிருந்து
விழுந்து இறந்தவர்களின்
எண்ணிக்கை
இத்தோடு இரண்டு ஆயிற்று.

முன்பு
தாத்தா காலத்தில்
ஒருவர்
கால் இடறி,
நீரில் விழுந்து மூழ்கி...

இப்போது
மற்றொருவர்
அவ்வாறே கால் இடறி,
மண்டை உடைந்து,
இரத்தம் சிந்தி...

ஆற்றங்கரையின் விளிம்பில்
வீற்றிருக்கும்
தென்னை மரத்திலிருந்து
விழுந்து இறந்தவர்களின்
எண்ணிக்கை
இத்தோடு இரண்டு ஆயிற்று.

- அருண்மொழித்தேவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It