யாருமற்ற இரயில்வே

More articles by இளவட்டம்

நடைபாதையின் ஒற்றைக்
குடிநீர்க் குழாயில் சொட்டும் நீரை
குடித்து விட்டு காகம் ஒன்று
தத்தித்தாவி தண்டவாளத்தின் மீது
வந்தமர்ந்தது!

 

 

ilavattam_track_55தலையை இடமும் வலமுமாய்
சாய்த்து தண்டவாளத்தின்
பளபளப்புக்கான காரணங்களை
அது பட்டியலிட முனைந்தது!

 

 

பயணம் செய்த பலரது
பாதம் பட்டதினாலா?
அல்லது
சதைத்துணுக்குகளில்
குருதி ஊற்றி பிடிக்கப்பட்ட
சாணத்தினாலா?
அல்லது ....

 

 

பட்டியலை முடிக்கும் முன்னரே
விபரீதம் ஒன்று அதன்
கண்களில் குடியேறத்
துவங்கியிருந்தது!

 

 

திடமாய் இருங்கள்
எக்கணமும் நிகழலாம்
மீண்டுமோர் தற்கொலை!

 

- இளவட்டம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.