தகாத வார்த்தையேனும்

தாய் மொழியில்
lady_15எதிர்ப்பட்டு உரைப்போனை
எதிர்ப்பார்த்து உலவுகையில்
நிசப்தத்தின் பெரும் ஒலி
நிரப்பியிருந்ததில்
அதிர்ச்சி ஏதுமில்லை......

வெம்மையின் கிரணங்கள்
வலியின் குவியலை
வேட்டையாடுகையில்
வெளிப்படுகிற வியர்வையும்
கானலென காய்வதிலே
கவனம் கொண்டிருந்தது......

வழியில் இடறுகிற கல்லில்
அனிச்சையாய் எழுகிற
அம்மா எனும் முனகல்
வீரியம் குறைந்தவனின்
புணர்ச்சியாய்
ஒலித்துக்கொண்டிருந்தது,
வெற்றிடத்தின் காற்றலைகளில்.....

- செ.பாலச்சந்தர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.