More articles by பிரேம பிரபா
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - தந்தைக்குத் திதி கொடுத்த ஈசன் (01 ஜூலை 2022)
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் - கட்டியக்காரன் (27 ஜூன் 2022)
- சாம்ராஜ்ஜியங்களின் சரிவும் கடைசி மன்னர்களும் (11 மார் 2022)
- நட்ட கல்லும் பேசுமோ?: 4. காவிரிக் கரையோரம் (17 பிப் 2020)
- நட்ட கல்லும் பேசுமோ?: 3. உப்பிலிக்கல் (04 செப் 2019)
ஏற்புடையதாக இல்லை எனினும்உன் வாதங்களில் உறைந்திருக்கும்
உட்பொருளை கண்டறிய
விவாதிக்க இயலாமலேயே போகிறது
கடைசிவரை
இடை செருகல்களாக
சொற்களின் தீண்டாமையில் விளைந்த
என் ஆழ் மோனத்தை தகர்த்தெறிய
வேண்டிய மட்டும் முயற்சித்து
தோற்றும் போகிறாய் நீ
பிறவிக்குணங்களை மாற்றி
கட்டமைக்கும்
நம் முயற்சிகளை முட்டிச் சாய்க்கிறது
பல யுகங்களின் சூட்சும முடிச்சு
அவரவர் உயரங்களை
பாதுகாக்கும் மறைமுக
தற்காப்புப் போர் யுக்திகளை விடுத்து
நம் இருவரும் ஒருமித்து
தரை இறங்கும்போது வைத்துக்கொள்ளலாம்
மீண்டும் ஒரு சமரச முயற்சியை.
- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )