என் இதயம்
நொறுங்கும்
சப்தம் மட்டுமே
உன்னிதயம்
நெருங்கும்
என்றால்

என் அழுகுரல்
மட்டுமெ
உன் செவி
உட்புகும் என்றால்

நான் ஊமையாக
இருந்து கொள்கிறேன்
நீ செவிடாக
இருந்து கொள்

இடையே
ஒரு ஓரமாய்
நம் காதல்
ஒளிந்து கொள்ளட்டும்.

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.