1.
கண்களை அகலத் திற -
எந்த கதவு மூடியிருக்கிறது
என்று ஒரு கை பார்த்துவிடலாம்.

2.
யாரும் இல்லாதபோது
கடவுள் தான் கிடைக்கிறார் -
சண்டை போடுவதற்கும்.

3.
இல்லாதவர்கள் சொல்வார்கள் -
"மடியில் கனமில்லை,
வழியில் பயமில்லை."
இல்லாததால் தான் சொல்வார்கள் -
"மடியில் கனமில்லை,
வழியில் பயமில்லை."

4.
"இல்லை" என்று சொல்லிவிட்டு
வேறு வேலையைப் பார்க்க முடியாதபோது
அங்கு ஏதோ இருக்க
ஆரம்பிக்கிறது.

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.