மாட்டிக் கொண்ட சிறுசு
துள்ளித் துவளுகிறது
கவ்விய வாயில் தியானம்
பெருசுக்கு
சிறுசு கூட்டம்
சுத்து போடுகிறது
பெருசு நிதானமாக
வேலையைப் பார்க்கிறது
மாட்டிக் கொண்டது
மாண்டு கொண்டிருக்கிறது
மற்றவை
மாட்டவும் கூடாத
சக மரித்தலையும் தடுக்க
வெற்றிடம் உதைத்துக்
கதறுகிறது
பெருசுக்கு பசி
சிறுசுகளுக்கு உயிர்
காடு திறந்து கிடக்கிறது
அதனதன் நியாயங்கள்
அதனதன் வாழ்வுக்கு....!

- கவிஜி

Pin It