நீண்ட நேரமாக
பேசிக் கொண்டிருந்தபோது
அவ்விருவர்
கையும் வாயும்
ஒன்றும்
‌சும்மா இல்லை

வாங்கி வந்தவர்
வாங்கப் போகிறவர்‌
உண்பவர் விற்பவர்‌

கூண்டுக்குள்
குருவிகளும் கிளிகளும்‌
நீர்க்குமிழிகள்
உடையும் நீர்த்தொட்டியில்‌
வண்ணமீன்களும்‌
சற்று உள்ளே
கோம்பை ராஜபாளையம்
நாய்க்குட்டிகளும்‌

பசி பிரகடனமாக‌
சப்தமிட்டாலும்‌
அதற்கு‌ இரைநேரத்தில்‌
உணவிடாது
வாசமாய்‌ பிரியாணி‌
விழுங்கும்‌
கடைக்காரன்‌
கசாப்புக்காரனைவிட
மோசமானவன்.

- சூர்யமித்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.