நீ தந்த முத்தத்தின்
ஈரத்தை உரசி சென்ற காற்று
உருவாக்குகிறது வானிலை மாற்றங்களை
அங்கக் கடலில் புது
காதல் அழுத்த உயர்வு அலைகளை...
நமக்குள் உருவான புயலுக்கு
ஊரெல்லாம் எச்சரிக்கைக் கொடிகள்..
உன்னில் மய்யம் கொண்டு
கரைகடந்த வேளை
நுரைபடிந்த மணல்வெளியில்
நண்டுகள் ஆடிக் களிக்கும்
நீ உரசிய கொந்தளிப்பை ..
வலசை வந்த கடலாமைகள்
கதகதப்பாய் இடுகின்றன
காதலின் முட்டைகளை குழிபறித்து ..
சுவருடைத்து வெளியேறுகிறது
பேரன்பின் குஞ்சுகள்
காதல் பெருங்கடலில் நீந்திட
வட்டமடித்திடும் காகங்களுக்கும் கழுகுகளுக்குமிடையே
ஏகாந்தமாய்....

- சதீஷ் குமரன்

Pin It