வீட்டின் கொல்லைப் புறத்தில்
தப்பி விழுந்து முளைத்த பாகற்கொடியில்
சிறிதாய் ஐந்து இதழ்கள் கொண்ட
மஞ்சள் நிற பாகற்பூ
நீண்ட காம்பினில்
துளி பிஞ்சுடன் தலையாட்டுகிறது
கொப்பு தேடிடும் அதன் கொழுந்துகள்
பற்றிட பேதங்கள் பார்ப்பதில்லை.
பூவில் புணர்ந்தபடி வந்தமரும்
ஒரு ஜோடி பச்சைத் தட்டான்களின்
குறையா பெருமோகம் கண்ட
கோடை மொட்டுவிடுகிறது
கணுக்கள் தோறும் காதலின் பொன் நிறத்தை

- சதீஷ் குமரன்

Pin It