தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
விளைநிலங்களில்
எரிவாயுக்குழாய் பதிப்பு
யோகா மையத்திலிருந்து
மாயமான பெண்
பிணமாகக் கண்டுபிடிப்பு
கோயிலுக்குள் நுழையவிடாமல்
சாமியாடிய பெண்மணி
குடிநீர்த் தொட்டியில் மலமென
செய்திகள் செய்தியாகவே
கடந்து கொண்டிருக்கின்றன
நியூட்டனின் மூன்றாம் விதியைப்
பொய்ப்பித்தபடி

உணவுக் குழாயிலிடப்பட்ட
தின்பண்டமென
பின்னகர்கின்றன
முந்தைய நிகழ்வுகள்

செரிக்காமலேயே
வெளியேறியதறியாமல்
டிரெண்டிங் வைரலென
புது தின்பண்டங்களுக்கு
தினந்தோறும்
அலைகின்றது
மனவாய்

- பா.சிவகுமார்

Pin It