எல்லா விடுமுறைகளையும்
விழுங்கி விடுகிறது
தூக்கமும்
சில நேரம் துக்கமும்
வாசலில் படுத்தே கிடக்கிறது
ஓயாத அசதியும்
தீராத வேலைகளும்
வெளியே அழைத்துச் செல்ல.
இருந்தாலும் இரண்டு நாள்கள்
போதுமானதுதான்
மூச்சுப் பயிற்சிகளை சரி செய்யவும்
வீட்டுப் பாடங்களை உளறியபடி உறங்கும்
குழந்தைகளுக்கு அவசரமின்றி அலுவல்
பதட்டமில்லாமல்
நிதானமாக ஒரு முத்தமிடவும்...

- சதீஷ் குமரன்

Pin It