அரமது கொண்டுதா னே- அறத்தினை
அறுக்குது மானுடம் அறிவுஇன் றி
கரமது இரண்டுகொண் டு- உழைப்பவர்
கழுத்தினை அறுத்திடக் கருதுதின் று
சுரணையை இழந்தச னம் - அநீதியை
சகிக்குது எதிர்த்திடும் ஆற்றலின் றி
துரத்துது வறுமையின் றே- புரட்சி
தோன்றிடப் போதிய தருணமின் றே!

வேலையோ கிடைப்பதில் லை- கிடைத்திடினும்
வேண்டிய சம்பளம் வருவதில் லை
சாலையின் இருபுற மும் - மனிதர்
தூங்கிடும் அவலமும் தொலைவதில் லை
பாலையின் குணத்துட னே- பாழும்
பட்டினி ஏழையைப் பிழிகிற தே!
மாலையும் முருகனை யும் - வணங்கி
மாள்வதில் நமக்கெதும் பயனில்லை யே!

மதமெனும் பேயுமின் றே- பிடித்து
மயக்குது பாரினில் மனிதனை யே
கதைகளை சரித்திர மாய்- ஆக்கிடக்
காவிகள் பரப்புது கருத்துயிங் கே
நிதமொரு பொய்யுரைத் தே- காவி
நெஞ்சினில் விஷவிதை நடுதுஇன் றே!
சிதைகிற மாண்புக ளும்- சீர்பெறும்
தேதியும் சீக்கிரம் வந்திடுமோ!

- மனோந்திரா

Pin It