ஊருணிக் கரைகளின் 
புதர்மண்டிய பிளவுகளில்,
பிறந்த நாள் முதலாய்த்
ததும்பி வழிந்து கிடந்து,
நீர் வற்றி வறண்ட
காலங்களில் நத்தையின்
முதுகுச்சுமை போலூர்ந்து
கரையேறி ஊருக்குள்
புகுந்து பரவிக்கிளைத்து,
நாட்டார் நகரத்தாரின்
கொட்டொலிகளில் பிறப்பைக்
கொண்டாடி மகிழ்ந்து,
பறையின் ஒலி போல்
செவிப்பறை கிழித்து
எனக்குள் எப்போதும்
எதிரொலித்துக் கிடக்கிறது,
என்னை யாரென்று எனக்கே
சொல்லித்தர இன்னும்
இருக்கிற எந்தன் சாதி..........

- கை.அறிவழகன் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
Pin It