எங்கிருந்தோ வீதி
நுழைந்த பூனை
சுற்றி சுற்றி பார்த்து விட்டு
மீண்டும் எங்கேயோ
நுழைந்து கொண்டது
பலத்த காற்று

இப்போது பூனை விடுத்து
வீதியில் அல்லாடும்
இலையொன்றை நான்
பின் தொடர்கிறேன்
பலத்த காற்று
மெல்ல பூனையிலிருந்து
இலையாகிக்
கொண்டிருக்கிறது

- கவிஜி

Pin It