என் அருகாமை
உருவாக்கிய சொற்றொடர்களில்
கோடிட்ட இடங்களை
க‌ட‌ல் க‌ட‌ந்து
வ‌ந்த பின்னும்‌
நிர‌ப்பச்சொல்லி
நிர்பந்தித்தது உறவு...
அவ்வாறே நிரப்பினேன்
 
கோடிட்ட இடங்கள்
காலியானது...
என் பணப்பையுடன்
சேர்ந்துகொண்டு...
 
முகமூடி அணிந்து
பழக்கப்பட்ட
தேர்வறையில்,
பாடங்கள் கவனிப்பாரற்று
மதிப்பெண்களே
பிரதானப்படும்போது
கோடிட்ட இடங்கள்
நிர‌ப்புவதும் கடனே...
 
மறக்காமல் இருக்க
பாடம் புரியாமல் ‌
மனப்பாடம் செய்வதுபோல...
 
- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It