potஏற்கனவே நிரம்பி
ஊற்றெனவே வழியும்
மனமொன்று என்னிடம்
இருக்கிறது..

இன்னும் ஒன்றை
இனிப்பாய் இருந்தாலும்
நிராகரித்துச் செல்கிறது..

ஆயுள் கூட்டி
ஆகாச மீன்களின் ஒளிர்வாய்
அஃதிருக்க
இந்நிறைவு போதுமானது!

யார் கண்ணும்
யாவோரிடத்தும்
பட்டுவிடல் ஆகாது!

பாயட்டும் இயல்பாய்!

- பவானி ரெகு

More articles by பவானி ரெகு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.