பரந்த இந்த தேசத்தில்
எல்லோருக்கும்
நான் வேராக இருக்கவே
பேராவல் கொண்டு
முயன்று வருகிறேன்.
எனினும்,
சிலர் என்னை படர் கிளையெனவும்,
விழுதாகவும்,
பசுந்தளிர் பரவும் கொடியாகவும்,
இளம் பிஞ்சாகவும்,
நறுமலராகவும் ,
கனியாகவும்,
கனியுதிர் விதையாகவும்,
ஆகாயத்தை மறைத்துப் பந்தலிடும்
குடை மரமாகவும்,
பழுத்த இலையெனவும்
ஏன் காய்ந்து மக்கிடும்
சருகாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால்
நான் வேராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
வேறாக அல்ல…
- முனைவர் சி.திருவேங்கடம், இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
வேராக நான்…
- விவரங்கள்
- சி.திருவேங்கடம்
- பிரிவு: கவிதைகள்
More articles by சி.திருவேங்கடம்
- கவசம்… (21 டிச 2019)
- நடுநிசியில்... (23 ஆக 2019)
- எட்டுத்தொகை காட்டும் பண்பாட்டுப் பதிவுகள் (08 நவ 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.