சனிக் கிழமைகள் எப்போதும் பாரம் கொண்டவையாக இருக்கின்றன
ஞாயிறுகளின் களிப்பை
கொண்டாட தேங்கிய பணி-
களை விரைந்து முடிப்பதற்காக ஏற்றிய பாரம்
ஞாயிறுகள் எப்போதும் மின்னலென மின்னி மறைகிறது
தடுமாற்றத்துடனே திங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
செவ்வாய் எப்போதும் மந்தமாகவே நகர்கிறது
புதன் கடமைகளுக்குள் நம்மை மூழ்கடிக்கிறது
வியாழனும், வெள்ளியும் அதே நிலையை நீட்டிப்பு செய்கிறது
இதோ சுழற்சியான நாட்களின் நகர்வில் மீண்டும்
பாரம் ஏறிய சனிக் கிழமை......

- பா.புருஷோத்தமன்

Pin It