பெருநகரப் புகைவெளியில்
நம்மை நகர்த்திச் செல்லும் எரிபொருளாய்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளின்
சிறுபுன்னகை
நம்மேல் கவியும் கரிப்புகை
துடைத்தெறிந்து
சட்டைப்பையில் கிடக்கும்
தேன்மிட்டாயென
சுவை கூட்டி கழிகிறது
கொடுங்கானல் வாழ்வு

- சதீஷ் குமரன்

Pin It