குளத்தைக் குத்தகைக்கு
ஏலம் எடுத்த குதூகலத்தில்
ஊரெல்லாம் உலா சென்றார் அவர்.
திரும்பி வந்து பார்த்தபோது
படர்ந்திருந்தது குளமனைத்திலும்
விசமேறிய பச்சைஇலைகள் நீர் உறிஞ்சி...
மூச்சுத் திணறலில் மீன்கள்.
பூத்துக் குலுங்கிய மலர்களில்
நச்சு விதைகள் பதுக்கிய விச மகரந்தங்கள்...
அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது
அத்தனையும் ஆகாயத் தாமரை என்று...
குத்தகைக்காரன் செல்பியில்
வீங்கிய செடியின் வெங்காயத் தாமரை
பல்லிளிக்கிறது காவிக் கறைப்படிந்து...
வலசை வரும் அயல் பறவைகள்
தின்று குதறிய உள்ளூர் மீன்களின் மண்டையோடுகளில்
பளபளக்கிறது...
Make in India

- சதீஷ் குமரன்

Pin It