ஒரு மூன்றாம்
கதை
போல் முடிந்து
போனது முதலும்
கடைசியுமான
நம்
சந்திப்பு...


மீண்டும் சந்திக்க
மறந்த
நம்
பார்வைகள்
விரல்
நுனி ஸபரிசங்கள்
மண்
புதைத்த
பாதங்கள்
தொடாமல்
தொட்டுணர்ந்த
அலை முத்தங்கள்
விட்டு
வந்த கரை
நுரைகள் எல்லாம்
மீண்டும் கடத்திப்
போனது
உன்
நினைவுகளூடே....

காணாமல்
போன
அந்த
நாட்கள்
கதவிடை
நசுங்கிய
விரலாய்
வலி மிகுந்து
கிடக்கிறது...

என்றோ
ஒரு நாள்
கண்டுணர்ந்து
உயிராழத்தில்
ஒதுங்கிய
நினைவுகளை
உரைக்காமல்
உயிரடங்கிடுமோ
எனும் பயத்தில்
நிதம்
தூங்குகிறது
உன் மீதான
என் பிரியம்...

- தமிழ் ஜோதி நடேசன்

Pin It