நனைந்த கூரை
கசிந்து கொண்டிருக்கிறது
புகை !

கோடைமழைக்குப் பின்
தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது
கரையான் புற்று !

மேகம் விலக
குளத்தில் பூக்கின்றன
விண்மீன்கள் !

வேரடி மண்ணை
மரமேற வைக்கிறது
பசித்த கரையான்!

- மகிழ்நன் மறைக்காடு

Pin It