ஒவ்வொரு கணங்களின்
தேவைகளில் தேர்வுகளில்
ஊடுருவும் வெப்பம்
அச்சில் வார்க்கிறது..
ஊற்றப்படும் குவளைகளின்
உருவங்கள் ஓரங்கள்
வடிவினைத் தருகின்றன...
கடினகால விதிகளை
மிருதுவான திரியாய்
மாற்றிக்கொள்கிறாள் ...
அவ்வப்போது வீசும்
மந்த மாருதத்தின்
குளுமையில்
மீண்டும் திடமாகிறாள்..
அழுக்குப்படிந்த சில
விரல்களின் பிடியில்
படிப்படியாக ஆடைகளின்
வண்ணம் மங்குகிறது ...
அவரவர்க்கு வேண்டிய
சந்தர்ப்பங்களில் மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் ...
ஒவ்வொரு கணங்களின்
தேவைகளில் தேர்வுகளில்
உ ருகி உருகி
உருமாறுகிறாள்
மெழுகினத்தாள்....

- அருணா சுப்ரமணியன்

Pin It