Boatபாதி புதைந்திருந்தாலும்
இறுக்கமாகவே
பற்றிக்கொண்டுள்ளது
நங்கூரம் என்னை ..
தத்தளித்துக் கொண்டே
தண்ணீரில்
தவம் செய்வதால்
மதம் பிடித்துவிடும்
என்றெண்ணி
என்னில்
இணைத்து உன்னை
மூழ்கடித்தானோ ????

மூழ்கினாலும் முட்டிய
இடத்திலேயே நிலையாய்
நிற்கிறாய் நீ
மடிக்குள் சிறைப்பட்டு
துடிக்கும் மீன்களின்
செதில்கள் தினம்
என்னில் சிதறுவதால்
சாத்தியமே எனது
தத்தளிப்புகளும்....

விடியட்டும்
விடுதலை கொடுப்பான்
மீனவன் இருவருக்கும்...
நம் விடுதலையின்
பின்னே
பல மரணங்கள் நிச்சயம்
ஆதலால்
என்னை இன்னும்
இறுகிப் பற்றிக்கொண்டு
மீள நினைக்காமல்
மூழ்கியே இரு ...

- ஜீ.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.