வட்டமிடும்
வல்லூறுகளின்
விழிகளில்
விழுந்திடாமல்
கானகம் உதிர்க்கும்
துயரக் கானங்களில்
கரைந்திடாமல்
இன்றைய
இரை தேடி
ஆகாயம் அளந்து
அலுத்து, களைத்து
கூடு திரும்பும்
ஒற்றைப் பறவை
அனைத்தும் மறந்து
சற்றே
ஆசுவாசமடைகிறது
தன்னைக் கண்டதும்
கூக்குரலிட்ட
குஞ்சுகளின்
அரவணைப்பில் ...

Pin It