விசும்பல்களும் விரசங்களும்

நிரம்பிய முன்னிரவு

நினைவுகள் மேலோட

கூனிக் குறுகி போர்வைக்குள்

தொலைக்க பாடுபட்டு

தோற்றுப்போய்

கண்ணீரில் கரைந்து போன

அத்தனை கவலைகளும்

உயிர்பெற்று தொண்டைவரை

நிரம்பிக்கொண்டு - கைதியாய்

நிற்கவைத்து பரிகசிக்க

எத்தனிக்கும் ஒரு மணித்துளியில்,

எங்கிருந்தோ

தென்றல் வருட

யாரிடமோ நன்றி சொல்லி..

யாரிடமோ மன்னிப்பு கேட்டு..

யாரிடமோ சரணடைந்து

சட்டென இறந்து போகிறேன்

தூக்கம் தொலைத்த

மற்றொரு இரவொன்றில்...

 

- செ. சுபாஷிணி

 

More articles by செ.சுபாஷிணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.