மூன்று வயது அக்காள்
அண்ணனோடும் சேர்த்த
செல்வ செழிப்பான வீட்டில்
துள்ளித் திளைத்ததாக
நாற்பதாண்டு காலங்களைக் கடந்தும்
நெஞ்சம் மறப்பதில்லை
சாயலில் சூனியமாவாள்
மூன்றாவதாய்ப் பிறந்த தம்பியின்
அதாவது ஆண் பிள்ளை யோகம்
முச்சந்தியில் நிற்க வைத்துவிடுமென்ற
பழமொழிக்குச் சான்றாதாரப்
பயனெடுத்தவள்
அதன் பிறகு நான்கவதாய்ப்
பிறந்த பெண் பிள்ளையின் யோகமும்
பரிபூரணமாய்க் கிட்டி
நடுத்தெருவிற்கே வந்துவிட்ட
அலங்கோலத்தின் உருவே வளர்ந்த
வறியவர் கைப் பந்தை
ஒரே கைத் தாங்கலில்
சுழல் செய்து முடிப்பாள்
மனங்கொண்டவரே மணாளானாய்
வாய்க்கப்பெற்றவளுக்கு
விதவிதமாய் நகைகள்
ரகம் ரகமாய்ப் புடவைகளென
அனுபவித்துப் பார்த்த போதும்
ராசாத்தியாய்ப் பிறந்தவளை மீட்க
இன்னமும் போராடியபடிதான்
இருக்கின்றன
மூன்று வயது நினைவுகள்
வாடகை வீட்டில்.....!

- புலமி

Pin It