கருப்பை இல்லாமலும்
குழந்தைகளை சுமக்கிறது
அனாதை இல்லம்

***

பத்திரமாய் இருக்கிறது
பறவைக்கூட்டில்
இறகுபந்து

***

இலைகளும் இல்லை
பழங்களும் இல்லை
மான் கொம்பில் குருவி

***

அலைபேசி அழைப்பிற்காக
மரத்தடியில் ஒதுங்குகிறேன்
ஆஹா குயிலோசை

***

கம்பத்தின் மேல் வித்தை
கரகோஷம் வாங்கும்
தேசியகொடி

***

ஆற்றங்கரையோர மரம்
இலைகள் உதிர்த்து
விடுகிறது மழைக்கான தூது

***

அக்கம்பக்கம் வாங்கிய
கஞ்சியுடன் நெசவாளி
காலை சுற்றும் நாய்

- பானால்.சாயிராம்

Pin It