ஆழ நீண்ட இரவினைக் கடந்து
கனவுகள் பாவித்து
உறங்கிக் கொண்டே இருக்கும்
நான் கடைசியில்
ஒரு மரக்கிளையில் நின்று
அதற்கு நேராய் மேலேயுள்ள
மற்றொரு கிளை பற்றித்
தத்தளிக்கின்றேன்
இனி விழுவேனோ குதிப்பேனோ
இல்லை சாகசம் செய்து
என்னை நான் ரசிப்பேனோ
என்றபடி மாறி மாறி
கைப்பிடிக்கு அருகிலுள்ள
இலைகளை விரல் தொட்டு
எண்ணிக் கொண்டிருந்தேன்
ஆவென்று பெருஞ்சத்தம்
பொத்தென்று வழக்கம் போல்
குருட்டுச் சித்தரிப்பினை விலக்கி
தரை கவ்வித் துடித்தேன்
வலியுண்டு தான்
மருந்தாய்த் தூக்கம் கலைந்தது.....!

- புலமி

Pin It