முடிவற்ற பொழுதொன்றில்
ரணத்தோடு தோய்கிறது
சில சிந்தனைகள்
மனக்கிடங்கின் உச்சக்குரலின்
பிம்பமாய்,
மரணம் தாண்டியும் காட்சிக்குள்
அடங்குகிறது
காட்சிப்பிழைகளாய்.
பிரிவில் உழன்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
மனதை எப்படி மீட்டெடுக்க
என்று தவித்து யோசித்த
கணமொன்றில்,
புதுமலரின் மரகத வாசமாய்
காற்றில் கரைந்து - என்
சிந்தனையைக் கொள்ளை கொள்ள
ஒரு பனிப்பாடலின் பல்லவி
போதுமானதாகத் தான்
இருக்கிறது.....

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It