katta panchathuஐந்து நாட்கள் முன்னால் நடந்த‌
வேலிப்பிரச்சனை முதலில் ஆரம்பிக்கும்...
பேச்சோடு பேச்சாக‌
முந்தா நாள் நடந்த வரப்பு பிரச்சனையும் வந்துபோகும்...
நேற்று காலை
ஆடுகள் அவர்கள் புல்லை மேய்ந்ததாக வேகமெடுக்கும்...
மாடுகள் மிரண்டு நிற்க
புளியமரங்கள் பயந்திருக்க கூட்டம் கூடும்..
பேச்சு நீள நீள‌
தீட்டப்பட்ட அருவாக்கள் உருவாகும்..
குழந்தைகளும் அடிக்கடி பயன்படுத்தும் வசவுகள்
சாதாரணமாய் வாயில் வந்து விழும்..
பெரும் பிரச்சனையாக உருவாகும் முன்னே
ஊர் பெரிய மனிதரால் சமாதானமாக்கப்பட்டு
ஓடித்திரிந்த இரண்டு கோழிகள் சமைக்கப்பட்டு
கம கம சாப்பாட்டுடன்
இனிதாய் முற்றுப்பெறும்
அன்றைய‌
எங்களூர் பங்காளிச் சண்டை...!!

- அ.வேளாங்கண்ணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.