poor familyஊரார் இட்டப் பணிகளை
ஓடியாடி செய்தான்
முனியன்;
ஒருநாளும் ஊரார்
விட்டதே இல்லை
சபைகளில் உட்கார
முனியனை
________________________

பழைய வீடு
இடிக்கப்படுகையில்
புது வீட்டைப் பற்றிய
கனவுகளுடன் நான்,
அப்பா, அம்மா, அக்கா
இருக்க
இடிந்த சுவரைத் தடவிய
பாட்டியின் கண்களில்
தாத்தா தெரிந்தார்
_______________________

உடைந்தது பலூன்
உள்ளே இருந்தது
காற்றல்ல
குழந்தைகள் மீதான
பிரியம்
______________

கயிற்றில் நடந்து
கசையடிகள் வாங்கிய
சிறுமி
தட்டேந்தி நிற்கையில்
என் மனம்
அந்தரத்தில் நடக்கிறது
பணமில்லா சட்டையால்

- ந.சுரேஷ், ஈரோடு

Pin It