சேர சோழ பாண்டியர் அல்லாது

பாரத நாட்டின் மன்னர்கள் யாவரும்

ஆதி சங்கரர் நாயன் மார்களின்

வாதில் மயங்கிப் புத்தரை மறந்தனர்

வருண முறையின் கொடுமை களையே

தருக்கி ஏற்று மாண்பை இழந்தனர்

திறமை என்ப தனைவர்க்கும் இருக்கையில்

சிறப்புயர்ப் பணிகளில் பார்ப்பனர் மட்டுமே

நிரம்பி வழிவதில் மற்றவர் உரிமை

சுரண்டப் படுவதை அறியலாம் என்பதை

அறிய மறுக்கும் சூத்திர மக்களே

செறிவாய்ச் சொன்னதை இன்றும் மறப்பின்

என்றும் பார்ப்பன அடிமையாய் இருப்பீர்

(சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாது, இந்திய நாட்டின் மன்னர்கள் அனைவரும், ஆதிசங்கரரின், நாயன்மார்களின் வாதங்களில் மதி மயங்கி (அனைத்து வகுப்பு மக்களுக்கும் சமமான வாய்ப்பு / நன்மை அளிக்கும் தத்துவத்தை அளித்த) புத்தரை மறந்தனர். (தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைத்து) கர்வம் கொண்டு தங்கள் சிறப்பை இழந்தனர். திறமை என்பது அனைத்து வகுப்பு மக்களிடமும் பொதிந்து இருக்கையில், கேந்திரமான உயர்நிலைப் பணிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே (அளவுக்கு மீறி) நிரம்பி வழிவதில், (உரிய பங்கு கிடைக்காமல்) மற்ற வகுப்பு மக்களின் உரிமைகள் சுரண்டப்படுகின்றன என்பதை அறிய மறுக்கும் சூத்திர மக்களே! செறிவான இக்கருத்தை (அன்றைய மன்னர்கள் ஏற்காதது போல) இன்றும் நீங்கள் ஏற்கவில்லை என்றால், என்றைக்கும் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாவே இருப்பீர்கள்.)

Pin It