தொழிலா ளர்களின் சமதர்ம அரசு

வழிதெரி யாது தவித்த நாடுகள்

உயர்தொழில் நுட்பம் எளிதாய் அடைய

வியக்கும் வகையில் ஈந்தது அன்று

சூழ்ச்சியி னாலே அவ்வரசு வீழ்ந்ததை

ஊழ்வினை என்று எண்ணிட வேண்டாம்

மீண்டும் உழைப்பவர் ஆட்சி மலர

மாண்பமை மக்களே ஒன்று திரள்வீர்

(பொருளாதார வளர்ச்சிக்கு வழி தெரியாது தவித்துக் கொண்டு இருந்த வளரும் நாடுகளுக்கு, வியக்கத் தக்க வகையில் அன்றைய தொழிலாளர்களின் (சோவியத்) சோஷலிச அரசு உயர்தொழில் நுட்பங்களை எளிதாக அளித்து உதவி செய்தது. சூழ்ச்சியினால் அவ்வரசு வீழ்ந்ததை ஊழ்வினை என்று எண்ணிட வேண்டாம். (இவ்வுலகில்) மீண்டும் உழைக்கும் மக்களின் ஆட்சி மலர பெருமை மிக்க மக்களே! ஒன்று திரளுங்கள்.)

Pin It