மழை
மழைவெளி
இரண்டும் பெறும் பரிமாணங்கள் வேறுவேறே
வாழ்நிலங்கள் புழுதி மேடாய்
பல்லாயிரம் அடி ஆழத்தில்நீர் வற்றி புகைகிறபோது
எண்ண மடிப்புக்கள் விரிகின்றன
குளிர்வதற்காய்
நான் எனக்கான மழையை
உருவாக்கவில்லை-அதற்கான
ஞானமும் என்னிடமில்லை.

மழை பெய்கிறது-அதுதரும் இதமான குளிர்,
வான விரிப்பில் மழையின் படர்தல்,
யன்னலைத் தாண்டாத அதன்கௌரவம்,,….
எல்லைகலோடு இரசித்தல்இவ்வளவே
எனக்கும் மழைக்குமானபிணைப்பு…..
இங்குமழை,மழைவெளி
இரண்டும் பெறும் பரிமாணங்கள் வேறுவேறே

பிணமேடைச் சாம்பல்கரைந்து வழிந்தோடுகிறதுமுற்றத்தில்.
வாசற்படியெங்கும் எலும்புத் துகள்கள்படிகின்றன.பனைகளும்,
உங்களுடையதும்பறி போகின்றன
மழை வெளியுள்.
நான் எனக்கானவற்றோடு
உயர் இருக்கைகளின்
மீதே இருந்து கொள்கிறேன்.
குளிர்தலுக்கான மழையல்லவிது
நடுங்கும் நட்சத்திரங்களை மூடிசரிகிறது மாய இருள்.
கடைசித் துளியும் வீழ்ந்துவெள்ளம் பெருக
வெறிச்சோடுகிறது புவி.
ஆரவாரம்,நிசப்தம்,எல்லாம்
சூனியம்புதிரடர்ந்த மழை வெளியுள்
தூரத் தொடர்கிறது மழை
அரோகர சிவனேமழை,மழைவெளி
இரண்டும் பெறும்பரிமானங்கள் வேறுவேறே

- மருதம் கேதீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It