தனக்கான தர்க்கங்களுடனே
More articles by அருண் காந்தி
- முழுமை பெறா காதல் (22 ஜன 2014)
- காகிதப் பறவை (20 ஜன 2014)
- ஓலம் (26 டிச 2013)
- புலம்பெயர் தெருவில்... (25 நவ 2013)
- திரிபு (04 ஜூலை 2013)
எல்லோரும் என்னைச்
சூழ்ந்திருக்கின்றனர்
சீரிழந்த மனங்களின் முடிவுகளில்
உண்மையின் வலியுறுத்தல்கள்
என ஏதுமில்லை-
எஞ்சி இருப்பன வெறும் ஏமாற்றங்களே
நான் புழங்கும் எண்களானது
என்னை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை
மீண்டும் மீண்டும் அதே
எண்களைப் பலமுறை
கூட்டிப் பார்க்கிறேன்
மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்- எண்கள்
என்னை ஒருபோதும் ஏமாற்றுவதே இல்லை!
- அருண் காந்தி(