முதலியம் ஆற்றும் பணியும் உளதென
மிதமாய்க் கூறும் மனமிலோர் இருப்பினும்
படைக்கலம் அன்றியும் பரப்புரைக் கருவியும்
உடையவர் கையில் ஓங்கி இருப்பினும்
நெறியுடன் வினைஞர் திரண்டு எழுந்தால்
வறிது திரும்பார் லெனின்முடி பதுவே

(முதலாளித்துவம் செய்து முடிக்க வேண்டிய பணிகள் உள்ளன (அதனால் சோஷலிசப் புரட்சியை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை) என்று சோஷலிச சமூகத்தை அமைப்பதற்கு மனமில்லாத போலிக் கம்யூனிஸ்டுகள் மிதமாகக் கூறினாலும், (மக்களை வன்முறையால் அடக்கும்) இராணுவம் மட்டுமல்லாமல் பொய்ப் பிரச்சாரத்தினால் மக்களை மயக்கத்திலேயே வைத்துக் கொள்ள முனையும் ஊடகங்களும் உடையவர்களின் கைகளில் வலுவாக இருப்பினும், சரியான வழியில் தொழிலாளர்கள் உறுதியுடன் திரண்டு எழுந்தால் வெற்றி இல்லாது திரும்ப மாட்டார்கள். லெனினின் முடிவு இது தான்)

- இராமியா

Pin It